இசையமைப்பாளர் சாம் சிஎஸ் மீது மோசடி புகார்
ADDED : 139 days ago
தமிழ் சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளராக இருப்பவர் சாம் சிஎஸ். ‛கைதி, விக்ரம் வேதா' உள்ளிட்ட பல வெற்றி படங்களுக்கு இசையமைத்துள்ளார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். இந்நிலையில் இவர் மீது தயாரிப்பாளர் சமீர் அலிகான் என்பவர் மோசடி புகார் அளித்துள்ளார்.
அவர் அளித்த புகாரில், ‛‛தமிழ் பையன் ஹிந்தி பொண்ணு என்ற படத்தை தயாரிக்கிறேன். இதற்கு இசையமைக்க சாம் சிஎஸ்-க்கு ரூ.25 லட்சம் பணம் தந்தேன். ஆனால் படத்திற்கு இசையும் தராமல், பணத்தையும் திரும்பி தராமல் இழுத்தடிக்கிறார் என கூறி சென்னை, கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.