உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'கொம்பு சீவி' படத்திற்காக மதுரை வட்டார தமிழில் டப்பிங் பேசும் சண்முக பாண்டியன்!

'கொம்பு சீவி' படத்திற்காக மதுரை வட்டார தமிழில் டப்பிங் பேசும் சண்முக பாண்டியன்!


மறைந்த நடிகர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் தற்போது நடித்துள்ள 'படைத்தலைவன்' படம் விரைவில் திரைக்கு வருகிறது. அந்த படத்தை அடுத்து 'வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன்' உள்ளிட்ட சில படங்களை இயக்கிய பொன்ராம் இயக்கும் 'கொம்பு சீவி' என்ற படத்திலும் தற்போது அவர் நடித்து முடித்துள்ளார்.

இப்படத்தில் சண்முக பாண்டியனுடன் தார்னிகா, சரத்குமார், காளி வெங்கட், கல்கி ராஜா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படம் 1996ம் ஆண்டு உசிலம்பட்டி - ஆண்டிப்பட்டி வைகை அணை பகுதிகளில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட கிராமத்து கதையில் உருவாகி உள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் தற்போது இறுதி கட்டப் பணிகள் தொடங்கி இருக்கிறது. குறிப்பாக சண்முக பாண்டியன் இந்த படத்திற்காக மதுரை வட்டார தமிழில் டப்பிங் பேசி வருகிறார். அது குறித்து வீடியோ ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது. படைத்தலைவனை அடுத்து உடனடியாக இந்த கொம்பு சீவி படமும் வெளியாகும் என்று தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !