விஜய்சேதுபதி நடித்துள்ள 'ஏஸ்' படத்தின் சென்சார் - ரன்னிங் டைம் வெளியானது!
ADDED : 138 days ago
ஆறுமுக குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு, பப்லு உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் 'ஏஸ்'. ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது. ஆக்சன் கதையில் உருவாகியுள்ள இப்படம் மே 23ம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில் இந்த ஏஸ் படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. அதில், இந்த படத்துக்கு தணிக்கை குழுவினர் யுஏ சான்றிதழ் அளித்திருப்பதாகவும், இப்படம் 2 மணி நேரம் 36 நிமிடங்கள் அதாவது 156 நிமிடங்கள் ரன்னிங் டைம் கொண்டது என்றும் தெரிவித்துள்ளார்கள். மேலும், இந்த படத்திற்கு பிறகு 'ட்ரெயின், தலைவன் தலைவி' போன்ற படங்களில் நடித்து வருகிறார் விஜய்சேதுபதி.