உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / குத்துப்பாடலில் சர்ச்சையான வரிகளை நீக்க சொன்ன பவன் கல்யாண் ; மரகதமணி தகவல்

குத்துப்பாடலில் சர்ச்சையான வரிகளை நீக்க சொன்ன பவன் கல்யாண் ; மரகதமணி தகவல்


தெலுங்கு திரையுலகின் முன்னணி ஹீரோவும் தற்போது ஆந்திராவின் துணை முதல்வருமான நடிகர் பவன் கல்யாண் நடிப்பில் நீண்ட கால தயாரிப்பில் இருந்து வரும் படம் 'ஹரிஹர வீரமல்லு'. இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இந்த படத்தின் முதல் பாகம் தற்போது வரும் ஜூன் 12ம் தேதி ரிலீசுக்கு தயாராகி வருகிறது. துவக்கத்தில் இந்த படத்தை இயக்குனர் கிரிஷ் ஜகர்லமுடி இயக்கி வந்தாலும் சில மாதங்களுக்கு முன்பு அவர் இந்த படத்தில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக இயக்குனர் ஏ.எம் ஜோதி கிருஷ்ணா மீதி படத்தை இயக்கி வந்தார். இந்த படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் இதன் புரமோஷன் நிகழ்ச்சிகள் துவங்கியுள்ளன.

அப்படி ஒரு நிகழ்ச்சியில் இந்த படத்தின் இசையமைப்பாளர் ஆஸ்கர் விருது புகழ் மரகதமணி பேசும்போது, “இந்த படத்திற்காக தாரா தாரா என்கிற ஒரு ஐட்டம் பாடலை உருவாக்கி இருந்தோம். அந்த பாடலை கேட்ட பவன் கல்யாண் அந்த பாடலில் இருந்து சில வரிகள் தேவையில்லாத சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக இருக்கின்றன என்றும் இப்போது தான் மிகவும் பொறுப்பான இடத்தில் இருப்பதால் இதையெல்லாம் கவனிக்க வேண்டி இருக்கிறது என்றும் எனவே அந்த வரிகளை மாற்றி விட்டு வேறு வரிகளை எழுதுங்கள் என்றும் கூறிவிட்டார். இது அவருடைய பொறுப்பையும் நம்பிக்கையின் பிரதிபலிப்பையும் காட்டுவதாக இருக்கிறது” என்று கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !