ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது
ADDED : 141 days ago
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் கூலி. ஸ்ருதிஹாசன், சத்யராஜ், நாகார்ஜுனா, உபேந்திரா, சவுபின் ஜாகிர் என பலர் முக்கிய வேடங்களில் நடிக்க, பாலிவுட் நடிகர் அமீர்கான் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் நடந்து வரும் நிலையில், ஆகஸ்ட் 14ம் தேதி இப்படம் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்றை படக் குழு தற்போது வெளியிட்டுள்ளது. அதில் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட பல காட்சிகள் இடம் பெற்றுள்ளது. ரஜினிகாந்த் படப்பிடிப்பு தளத்துக்குள் வருவது, இயக்குனருடன் பேசுவது, ரசிகர்களை பார்த்து கை அசைப்பது என பலதரப்பட்ட காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது.