அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன்
ADDED : 138 days ago
மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, திரிஷா, அபிராமி உள்ளிட்டோர் நடித்துள்ள ‛தக் லைப்' படம் ஜுன் 5ம் தேதி ரிலீஸாகிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்காக நடிகர் கமலின் மகளும், நடிகையுமான ஸ்ருதிஹாசன் சென்னை வந்துள்ளார். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ருதி....
‛‛கூலி படத்தின் டப்பிங் பணிகள் நடக்கின்றன. ரஜினி உடன் நடித்தது புதிய அனுபவமாக இருந்தது. எனக்கு படம் பிடித்துள்ளது, ரசிகர்கள் அனைவரும் ரசிப்பார்கள். தக் லைப்பில் பாட வாய்ப்பு தந்த ஏஆர் ரஹ்மானுக்கு நன்றி. அப்பா படத்தில் பாடியது மகிழ்ச்சி. படம் பிரமிப்பாக உள்ளது. படம் வெளியாகும்போது ரசிகர்களுடன் சேர்ந்து படம் பார்ப்பேன். விஜயின் அரசியல் வருகைக்கு வாழ்த்துகள். அப்பா கூப்பிட்டால் எப்போது வேண்டுமானாலும் அவர் உடன் இணைந்து நடிக்க நான் ரெடி'' என்றார்.