ஷாருக்கானை வைத்து அலைபாயுதே திட்டம்! - மணிரத்னம்
ADDED : 140 days ago
இந்திய சினிமா அளவில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க இன்னும் பல முன்னணி நடிகர்கள் காத்திருக்கின்றனர். தற்போது ‛தக் லைப்' படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்திற்கான புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார் மணிரத்னம்.
அப்போது மணிரத்னம் ஒரு பேட்டியில் கூறியதாவது, ஹிந்தியில் 'தில் சே' படத்தை இயக்குவதற்கு முன்பே அலைபாயுதே படத்தின் கதையை ஹிந்தியில் இயக்குவதாக இருந்தேன். ஷாருக்கான், கஜோலை வைத்து இந்த படத்தை இயக்கலாம் என இருந்தேன். ஆனால், அப்போது கிளைமாக்ஸ் சரியாக அமையவில்லை என்பதால் அந்த சமயத்தில் கைவிட்டேன் என தெரிவித்தார்.