பிரேம் குமார் இயக்கத்தில் விக்ரம்?
ADDED : 140 days ago
‛96' பட இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் கடைசியாக வெளியான ‛மெய்யழகன்' படம் நல்ல விமர்சனங்களை பெற்ற அளவிற்கு வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை. கடந்த சில மாதங்களாக இவர் ‛96' இரண்டாம் பாகத்திற்கான பணிகளை மேற்கொண்டு வந்தார்.
சமீபத்தில் பிரேம் குமார் நடிகர் விக்ரமை சந்தித்து புதிய படத்திற்கான கதை ஒன்றைக் கூறியுள்ளார். இந்த கதை விக்ரமிற்கு பிடித்துள்ளதால் தற்போது இதன் பணிகள் அடுத்த கட்டத்திற்கு நகரும் என தகவல்கள் தெரிவிக்கின்றனர்.