மந்தமான வசூலில் விஜய் சேதுபதியின் ‛ஏஸ்'
ADDED : 140 days ago
ஆறுமுக குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ருக்மிணி வசந்த், யோகி பாபு உள்ளிட்ட பலரது நடிப்பில் கடந்த 23ம் தேதி திரைக்கு வந்த படம் ‛ஏஸ்'. இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், தமிழகத்தில் மட்டும் முதல் நாளில் 75 லட்சம் வசூலித்திருக்கிறது. நேற்று ஒரு கோடி வசூலித்துள்ளது. அதேசமயம் இரண்டு நாட்களில் உலக அளவில் 3.2 கோடி வசூலித்துள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழைமை என்பதால் கூடுதலாக வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த வாரம் திரைக்கு வந்த சூரியின் ‛மாமன்' படம், நேற்று மட்டும் 2.54 கோடி வசூலித்துள்ள நிலையில், திரைக்கு வந்து ஒன்பது நாட்களில் உலக அளவில் 25 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.