உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கிரண் பாடலுக்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்புவாரா

கிரண் பாடலுக்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்புவாரா

நடிகை வனிதா விஜயகுமார் இயக்கி, நடித்திருக்கும் படம் மிஸஸ் அண்ட் மிஸ்டர். இந்த படத்தை அவர் மகள் ஜோவிகா தயாரித்து இருக்கிறார். ராபர்ட் மாஸ்டர் ஹீரோவாக நடித்துள்ளார். 40 வயதை தாண்டிய தம்பதிகளின் காதல், கர்ப்ப பிரச்னைகளை கதை பேசுகிறது. இந்த படத்தில் கிரண் ஆடிய ஒரு கவர்ச்சி பாடல் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதாவது, மைக்கேல் மதன காமராஜன் படத்தில் இளையராஜா இசயைமைத்த ராத்திரி சிவராத்திரி பாடலுக்கு ராபர்ட் மாஸ்டருடன் இணைந்து படு கவர்ச்சியாக டான்ஸ் ஆடியிருக்கிறார் கிரண்.

இந்த படத்துக்கு இசையமைத்த ஸ்ரீகாந்த் தேவா, ஒரு வகையில் இளையராஜா குடும்பத்துக்கு சொந்தக்காரர் என்றாலும், முறைப்படி ரைட்ஸ் வாங்கி இந்த பாடலை படத்தில் பயன்படுத்தி இருக்கிறாரா? அல்லது வழக்கம்போல் இளையராஜா தரப்பு நோட்டீஸ் அனுப்புமா என்பது பலரின் கேள்வியாக இருக்கிறது.

சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கிய மைக்கேல் மதன காமராஜன் படத்தில் அந்த பாடலை இளையராஜா இசையில் மனோ, சித்ரா பாடியிருந்தனர். கமல்ஹாசன், ரூபினி ஆடியிருந்தனர். இதே படத்தில் இடம் பெற்ற பேரு வெச்சாலும் பாடலை, சந்தானம் நடித்த டிக்கிலோனா படத்தில் ரீமிக்ஸ் பண்ணியிருந்தார் யுவன்ஷங்கர்ராஜா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !