மன்சூர்அலிகானுக்கு தேவை வாய்ப்பூட்டு
இப்போதெல்லாம் சினிமா மேடைகளில் வாய்க்கு வந்தபடி பேசி, அரசியல் சர்ச்சைகளை உருவாக்குகிறார் மன்சூர் அலிகான். சமீபத்தில் நடந்த ராஜபுத்திரன் படவிழாவில் மைக் பிடித்தவர், பிரதமர் பற்றி, மத்திய அரசு பற்றி, நிதியமைச்சர் பற்றி கடுமையாக பேசினர். அந்த பேச்சை கேட்டவர் முகம் சுளித்தனர். மன்சூர் அலிகான் பல ஆண்டுகளாக மத்திய அரசுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருக்கிறார். அது அவர் தனிப்பட்ட விருப்பம். ஆனால், சினிமா மேடைகளில் இப்படி பேசுவது தவறு. அவர் பேச்சால் சம்பந்தப்பட்ட படக்குழுவுக்கு பிரச்னைகள் வரலாம். இனி, இப்படி பேசும் மன்சூர் அலிகானை சினிமா விழாக்களுக்கு அழைக்க கூடாது அல்லது அரசியல் பேசக்கூடாது என்று கண்டிசன் போட வேண்டும் என்கிறார்கள் பலர். சமீபத்தில் கூட அவர் மகன் போதை வழக்கில் கைதாகி சிறை சென்றார். போதை விவகாரம் குறித்து, மகன் குறித்து அவர் பேசுவாரா என கோலிவுட்டில் குரல்கள் கேட்கின்றன.