உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மீண்டும் இணையும் தெகிடி கூட்டணி!

மீண்டும் இணையும் தெகிடி கூட்டணி!


கடந்த 2014ம் ஆண்டில் அறிமுக இயக்குனரான ரமேஷ் இயக்கத்தில் அசோக் செல்வன் நடித்து வெளியான படம் 'தெகிடி'. இந்த படத்திற்கு பிறகு இந்த இயக்குனரின் அடுத்த படம் குறித்து எந்தவொரு தகவலும் இல்லை. அவரும் ஐ.டி கம்பெனிக்கு வேலைக்கு சென்றாக தகவல்கள் இருந்தது. ஆனாலும், தெகிடி படத்திற்கென தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

இந்த நிலையில் 11 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ரமேஷ், அசோக் செல்வன் கூட்டணி இணைகின்றனர். இது 'தெகிடி 2' அல்லது புது படமா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. ஆனால், இந்த படத்திற்காக கடந்த நான்கு ஆண்டுகளாக ரமேஷ் திரைக்கதை பணிகளைக் மேற்கொண்டு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !