உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விஜய் ஆண்டனியின் மார்கன் டிரைலர் வெளியானது

விஜய் ஆண்டனியின் மார்கன் டிரைலர் வெளியானது

லியோ ஜான் பால் இயக்கத்தில் விஜய் ஆண்டனி காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள படம் மார்கன். சஸ்பென்ஸ் திரில்லர் கதையில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு விஜய் ஆண்டனியே இசையமைத்து, தயாரித்தும் இருக்கிறார். இந்த படம் வருகிற ஜூன் 27ம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில் மார்கன் படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது. அந்த டிரைலரில், இப்படம் ஒரு சைக்கோ பற்றி கதையில் உருவாகி இருப்பது தெரிகிறது.

அடுத்தடுத்து கொலை செய்யும் அந்த சைக்கோ, அந்த உடல்களை கருப்பு நிறத்துக்கு மாற்றி குப்பை தொட்டியில் போட்டு விடுகிறான். இதையடுத்து அந்த சைக்கோ கொலைகாரனை கண்டுபிடிக்க தனது காவல்துறை படையுடன் விஜய் ஆண்டனி களம் இறங்குவது தான் இந்த மார்கன் படத்தின் கதை என்பது தெரிகிறது. இந்த டிரைலர் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !