உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவச ரோபோடிக் அறுவை சிகிச்சை ; மம்முட்டியின் புதிய உதவிக்கரம்

14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவச ரோபோடிக் அறுவை சிகிச்சை ; மம்முட்டியின் புதிய உதவிக்கரம்


மலையாளத்தில் தற்போதும் முன்னணி நடிகர்களில் ஒருவராக பிசியான நடிகராக வலம் வருகிறார் நடிகர் மம்முட்டி. ஒரு பக்கம் சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தாலும் இன்னொரு பக்கம் தனியார் மருத்துவமனை ஒன்றின் பங்குதாரராக இருக்கிறார். அதே சமயம் அறக்கட்டளை ஒன்றை துவங்கி மக்களுக்கு பல்வேறு விதமான உதவிகளை செய்து வருகிறார். குறிப்பாக இந்த அறக்கட்டளை மூலமாக மருத்துவ உதவிகளை அதிகம் செய்து வருகிறார் மம்முட்டி. சிவகாசியில் சில வருடங்களுக்கு முன்பு பட்டாசு ஆலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டபோது அதில் காயமடைந்தவர்களுக்காக பல லட்சம் மதிப்பிலான மருந்துகளை அனுப்பி உதவி செய்தார் மம்முட்டி.

அவ்வப்போது தொடர்ந்து இது போன்ற மருத்துவ உதவிகளை செய்து வரும் மம்முட்டி, தற்போது தனது அறக்கட்டளை மூலமாக வாத்சல்யம் என்கிற பெயரில் புதிய மருத்துவ உதவி ஒன்றை அறிவித்துள்ளார். இதன்படி 14 வயதுக்கு உட்பட்ட, பொருளாதார சிரமத்தால் அறுவை சிகிச்சை செய்ய முடியாமல் தவிக்கின்ற குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு விதமான அறுவை சிகிச்சைகளை இலவசமாக இந்த வாத்சல்யம் செய்து தருகிறது. இதற்கான அறுவை சிகிச்சைகளை மேற்கொள்வதற்காக ஆலுவாவில் உள்ள ராஜகிரி ஹாஸ்பிடல் மம்முட்டியின் அறக்கட்டளையுடன் கைகோர்த்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !