உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அயோத்தியில் நான்காவது 'மனை' வாங்கிய அமிதாப்பச்சன்

அயோத்தியில் நான்காவது 'மனை' வாங்கிய அமிதாப்பச்சன்

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் கடந்த வருடம் ராமர் கோவில் புதிதாகக் கட்டப்பட்டு பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்டது. அந்த நிகழ்வில் பல சினிமா பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் கலந்து கொண்டனர். அயோத்தியில் தங்களுக்கென தனி இடத்தை வாங்க பல பிரபலங்கள் முதலீடு செய்து வருகின்றனர்.

நடிகர் அமிதாப்பச்சன் சமீபத்தில் 40 கோடி ரூபாய் மதிப்பில் சுமார் 25 ஆயிரம் சதுரஅடி மனை ஒன்றை வாங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. அயோத்தியில் அவர் வாங்கியுள்ள நான்காவது இடம் இது என்கிறார்கள். இதற்கு முன்பு 10 ஆயிரம் சதுர அடி இடத்தை 14.5 கோடிக்கும், 5 ஆயிரம் சதுர அடி இடத்தை 4.5 கோடிக்கும், அவர்களது குடும்ப டிரஸ்ட் சார்பாக 54 ஆயிரம் சதுர அடி இடம் ஒன்றை வாங்கியுள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன.

ரியல் எஸ்டேட்டில் அமிதாப்பச்சன் எப்போதுமே அதிகமாக முதலீடு செய்வார். அவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் மும்பையில் பல கோடி மதிப்புள்ள சில வீடுகள் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !