உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தீபிகா படுகோனேவுக்கு எதிரான ரீல்ஸ்க்கு லைக் செய்தாரா தமன்னா : இன்ஸ்டா மீது புகார்

தீபிகா படுகோனேவுக்கு எதிரான ரீல்ஸ்க்கு லைக் செய்தாரா தமன்னா : இன்ஸ்டா மீது புகார்

சமீபத்தில் பிரபாஸ் நடிப்பில் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கும் ஸ்பிரிட் என்ற படத்தில் இருந்து தீபிகா படுகோனே சம்பள பிரச்னையால் விலகி இருந்தார். அதன்பிறகு தீபிகா படுகோனே இடத்தில் தான் சொன்ன கதையை அவர் வெளியிட்டதாக குற்றம் சாட்டியிருந்தார் சந்தீப் ரெட்டி வங்கா. அப்போது அதுகுறித்து வெளியான ஒரு ரீல்ஸிற்கு நடிகை தமன்னா லைக் செய்ததாக சர்ச்சை வெடித்துள்ளது. அதற்கு தமன்னா ஒரு மறுப்பு தெரிவித்திருக்கிறார்.

அவர் கூறுகையில், 2020ம் ஆண்டு தீபிகா படுகோனே பேசிய ஒரு வீடியோவுக்கு மட்டும்தான் நான் லைக் செய்தேன். இப்போதைய வீடியோவுக்கு நான் லைக் செய்யவில்லை. என்றாலும் இன்ஸ்டாகிராம் நான் லைக் செய்தது போன்று தவறாக காட்டுகிறது. இப்படி நாம் லைக் செய்யாமலேயே தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்ஸ்டாகிராம் லைக் செய்வதால் தேவை இல்லாத பிரச்சனைகள் ஏற்படுகிறது. அதனால் இதை இன்ஸ்டாகிராம் சரி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார் தமன்னா.

என்றாலும் அதெப்படி, நீங்கள் லைக் செய்யாமல் லைக் காட்டும் என்று அவரது இந்த விளக்கத்துக்கு சோசியல் மீடியாவில் பலரும் விமர்சித்து வருகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !