மேலும் செய்திகள்
மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா
124 days ago
மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ?
124 days ago
போலீஸ் அதிகாரியாக அஞ்சு குரியன்
124 days ago
இணையதள தேடல் : தீபிகா படுகோன்
124 days ago
கானக் குயிலாய் மனதை வருடும் இனிய பாடல்கள் மூலம் இன்னிசை நிகழ்ச்சிகளில் அசத்தி வருகிறார் 15 வயதான பாடகி ஸ்ரீநிதா. தினமலர், சண்டே ஸ்பெஷலுக்காக மனம் திறக்கிறார் : சொந்த ஊர் மேட்டுப்பாளையம். பெற்றோர் மகேந்திரன், கோமதி. இருவரும் அரசு பள்ளி ஆசிரியர். மூன்றரை வயதில் கோயம்புத்துார் கவுண்டன்பாளையம் சரோஜாவிடம் கர்நாடக சங்கீதம் கற்றேன். ராகவேந்திரா பஜன்திரியிடம் ஹிந்துஸ்தானி பயிற்சி பெற்றேன். திரை இசை பாடலிலும் ஜொலிக்க கேரளாவை சேர்ந்த ஸ்ரீராஜ் சாஜன், லட்சுமியிடம் கற்று வருகிறேன்.
மேற்கத்திய இசையை மணிப்பூர் ரே அச்சான் என்பவரிடம் கற்கிறேன். பல தரப்பட்ட ஆசிரியர்களிடம் கர்நாடக இசை, ஹிந்துஸ்தானி, திரைப்பட பாடல் பயிற்சி பெற்று திரையிசை பின்னணி பாடகராக வர லட்சியத்துடன் தயாராகி வருகிறேன். தமிழ் திரையிசை, ஆல்பம் பாடல்கள் பாடியுள்ளேன். டிவி., ரியாலிட்டி ேஷாக்களில் திரையிசை பாடல்களை பாடி பரிசு பெற்றுள்ளேன்.
மலேசியா சேனல் நடத்திய குரலோசை இசை போட்டியில் முதலிடம் பெற்றேன். சூப்பர் சிங்கரில் 'டைட்டில் வின்னர்' ஆனேன். ரியாலிட்டி ஷோவில் நான் பாடி முடித்ததும் பின்னணி பாடகி சித்ரா என்னை பாராட்டி ஆசிர்வாதம் அளித்தது மறக்க முடியாத தருணம்.
எனக்கு பெருமை தேடி தந்த விஷயம் எனது 14வது வயதில் நடந்தது. மத்திய அமைச்சர் முருகன் வீட்டில் பொங்கல் விழாவிற்கு பிரதமர் மோடி வந்திருந்தார். அங்கு 'சத்தியம் சிவம் சுந்தரம்' ஹிந்தி பக்தி பாடலை பிரதமர் முன் பாட எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அப்போது எனக்கு ஏற்பட்ட படபடப்பை மறைத்து அவர் முன் நான்கரை நிமிடம் பாடலை பாடினேன். கையில் தாளம் போட்டவாறே ரசித்த பிரதமர் மோடி, மேடையில் இருந்த என்னை அழைத்து, அவர் அணிந்திருந்த அங்கவஸ்திரத்தை போர்த்தி, 'அழகாக பாடுகிறீர்கள். இன்னும் வளர வேண்டும்' என பாராட்டியதை பெருமை தந்த விஷயமாக பார்க்கிறேன். அவர் அளித்த சால்வை விலைமதிக்க முடியாதது. அந்த சால்வையை, 'பிரேம்' போட்டு பாதுகாக்கிறேன்.
ஆகஸ்ட் முதல் 5 ஆண்டுகள் கோல்கட்டாவில் ஹிந்துஸ்தானி இசை பயிற்சி பெற முடிவு செய்துள்ளேன். இதுவரை எஸ்.பி.பி., சூப்பர் சிங்கர் விருது, தமிழ் பாடகி விருது, சிறந்த பாடகி விருது, டில்லி தமிழ் சங்கம் சார்பில் மெல்லிசை விருது, வெற்றிநாயகி விருது என 70 க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளேன்.
இலங்கை யாழ்ப்பாண இன்னிசை நிகழ்ச்சியில் பாடிய பின் அங்குள்ள தமிழர்கள் பாராட்டியது, இன்னும் சாதிக்க ஆர்வத்தை துாண்டியது. பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல் போன்று புகழ் பெற வேண்டும் என்றார்.
124 days ago
124 days ago
124 days ago
124 days ago