உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / முதல் முறையாக இணையும் ரவி மோகன், எஸ்.ஜே. சூர்யா!

முதல் முறையாக இணையும் ரவி மோகன், எஸ்.ஜே. சூர்யா!

நடிகர் ரவி மோகன் தற்போது ஜீனி படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்து கராத்தே பாபு எனும் அரசியல் கலந்த படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து டிக்கிலோனா, வடக்குப்பட்டி ராமசாமி ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் யோகி இயக்கத்தில் ரவி மோகன் நடிப்பதாக தகவல் வெளியானது. இதை ரவி மோகனே தான் துவங்கியுள்ள புதிய தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்க போவதாக தெரிகிறது. இது இரண்டு ஹீரோ கொண்ட படமாம். ஒரு ரோலில் ரவி மோகனும், இன்னொரு முக்கிய ரோலில் எஸ்.ஜே. சூர்யாவும் நடிக்க உள்ளார். இதுவரை ரவி மோகன், எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடிக்கவில்லை. இந்தப்படம் மூலம் முதன்முறையாக இணைந்து பணியாற்ற உள்ளனர். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள். தொடர் தோல்விகளால் தவித்து வரும் ரவி மோகனுக்கு கட்டாய வெற்றி தேவைப்படுகிறது. அந்தவகையில் தற்போது அவர் நடித்து வரும் படங்களை மிகுந்த கவனமுடன் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் ரவி மோகன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !