ஜூன் 27ல் ரிலீஸாகும் மிஸ்டர் ஜூ கீப்பர்
விஜய் டிவியில் நடித்த பலரும் ஹீரோவாகிவிட்டார்கள். சந்தானம், சிவகார்த்திகேயன், மாகபா, ரக் ஷன், கவின் போன்றவர்கள் வரிசையில் மிஸ்டர் ஜூ கீப்பர் என்ற படத்தின் மூலம் புகழ் ஹீரோவாகிவிட்டார். மாதவன் நடித்த என்னவளே படத்தை இயக்கிய சுரேஷ் இயக்கியுள்ளார். ஒரு புலிக்குட்டியை பூனைக்குட்டி என நினைத்து ஹீரோ வளர்க்க, அது வளர, என்ன நடக்கிறது என்ற ரீதியில் கதை நகர்கிறது. சில காரணங்களால் சிலமுறை படத்தின் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜூன் 27ல் படம் ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புகழ் ஜோடியாக ஷிரின் நடித்துள்ளார். மற்ற படங்களில், டிவி நிகழ்ச்சியில் காமெடி செய்து வந்த புகழ் இதில் அப்பாவி ஹீரோவாக, வன அதிகாரிக்கு பயந்து ஓடுபவராக நடித்துள்ளார். புலிக்குட்டியும் கதையில் முக்கிய கேரக்டராக நடித்துள்ளது. அந்த காட்சிகள் வெளிநாட்டில் படமாக்கப்பட்டுள்ளன. யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.