உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விஜய் உணர்ச்சி வசப்பட்டாரா? அழுதாரா

விஜய் உணர்ச்சி வசப்பட்டாரா? அழுதாரா

விஜய் நடித்த ஜனநாயகன் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. அனைவருக்கும் பிரியாணி போட்டு வழியனுப்பி வைத்தார் விஜய் என்று தகவல்கள் கசிகின்றன. இன்னும் பாடல்காட்சி எடுக்கப்பட வேண்டியது இருக்கிறதா? பேட்ச் வொர்க் எடுக்கப்படுமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. ஹீரோவாக விஜயின் 32 ஆண்டு பயணம் சில நாட்களுக்குமுன்பு முடிந்துவிட்டது. இனி நடிக்கமாட்டேன் என்று அறிவித்துவிட்டார். கடைசி நாள் படப்பிடிப்பில் அவர் எப்படி இருந்தார். கடைசியாக நடித்தபோது எப்படி பீல் பண்ணினார். உணர்ச்சிவசப்பட்டாரா? அழுதாரா என்பது கோலிவுட்டில் பலரின் கேள்வியாக இருக்கிறது. மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படம்தான் எம்ஜிஆரின் கடைசி படம். அதற்குபின் அவர் முதல்வர் ஆகிவிட்டார். ஜனநாயனுக்குபின் விஜய் வாழ்க்கை எப்படி மாறப்போகிறதோ என்பது பலரின் ஆர்வமாகவும் இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !