விமானப்படை அதிகாரி தோற்றத்தில் தனுஷ்
ADDED : 203 days ago
ராஞ்சனா, அட்ரங்கி ரே ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குனர் ஆனந்த் எல் ராய், நடிகர் தனுஷ், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் உருவாகி வரும் படம் 'தேரே இஸ்க் மெயின்' . ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு பல கட்டமாக டில்லி, பனாரஸ் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வருகிறது. கதாநாயகியாக கீர்த்தி சனோன் நடிக்கிறார்.
காதலை மையப்படுத்தி உருவாகி வரும் இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் கல்லூரியில் நடைபெற்று வந்தது. இப்போது இறுதிகட்ட படப்பிடிப்பு துவங்கி உள்ளது. இதில் தனுஷ் இந்திய விமானப்படை அதிகாரியின் தோற்றத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியான போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் அவரது பெயர் ஷங்கர் என குறிப்பிடப்பட்டுள்ளது.