மேலும் செய்திகள்
கூலி: அமெரிக்காவில் 7 மில்லியன் வசூல்
94 days ago
ரஜினி, கமல் இணையும் படத்தில் சூர்யா நடிக்கிறாரா?
94 days ago
தமிழ் சினிமாவில் அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரையிலும் சினிமாவில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் படத் தயாரிப்பிலும் சில நடிகர்கள் இறங்கி இருக்கிறார்கள். சொந்தமாக படத் தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்து பெரும் வெற்றியைப் பெற்றவர்களும் உண்டு. தோல்வியை சந்தித்து தொடர்ந்து நடத்த முடியாமல் விலகிப் போனவர்களும் உண்டு. இருந்தாலும் சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தை சினிமாவிலேயே முதலீடு செய்கிறார்களே என்ற பாராட்டு சினிமா உலகத்தில் அவர்களுக்குக் கிடைப்பதுண்டு.
எம்ஜிஆர், சிவாஜி காலத்திலிருந்தே நடிகர்கள் சொந்த படத் தயாரிப்பு நிறுவனங்களை ஆரம்பித்து அவர்கள் நடித்த படங்களையும் மற்றவர்கள் நடித்த படங்களையும் தயாரித்துள்ளார்கள்.
எம்ஜிஆர் நிறுவனத்தின் பெயர் எம்ஜியார் பிக்சர்ஸ், சிவாஜி - சிவாஜி புரொடக்ஷன்ஸ், ரஜினிகாந்த் - லோட்டஸ் இன்டர்நேஷனல், கமல்ஹாசன் - ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், விஜய் - விவி கிரியேஷன்ஸ், சூர்யா - 2 டி என்டர்டெயின்மென்ட், பிரபு தேவா - பிரபு தேவா ஸ்டுடியோஸ், தனுஷ் - உண்டர்பார் பிலிம்ஸ், விஷால் - விஷால் பிலிம் பேக்டரி, விஷ்ணு விஷால் - விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ், அருண் விஜய் - இன் சினிமாஸ் என்டர்டெயின்மென்ட், ஆர்யா - த ஷோ பியூப்புள், சிவகார்த்திகேயன் - எஸ்கே புரொடக்ஷன்ஸ், விஜய் சேதுபதி - விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ், சசிகுமார் - கம்பெனி புரொடக்ஷன்ஸ், சந்தானம் - ஹேண்ட்மேட் பிலிம்ஸ் என பல முன்னணி நடிகர்கள் தயாரிப்பு நிறுவனங்களை ஆரம்பித்து படங்களைத் தயாரித்துள்ளார்கள்.
அவர்களது வரிசையில் தற்போது நடிகர் ரவி மோகன், புதிதாக ரவி மோகன் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனத்தை ஆரம்பித்திருக்கிறார். விரைவில் இவரது முதல் படத் தயாரிப்பு பற்றிய அறிவிப்பு வெளியாக உள்ளது.
94 days ago
94 days ago