உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அனுஷ்கா போஸ்டரால் ஏற்பட்ட விபத்துகள் : இயக்குனர் ஓபன் டாக்

அனுஷ்கா போஸ்டரால் ஏற்பட்ட விபத்துகள் : இயக்குனர் ஓபன் டாக்

2010ம் ஆண்டில் கிரிஷ் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், அனுஷ்கா, மஞ்சு மனோஜ் ஆகியோர் இணைந்து நடித்து வெளிவந்த படம் 'வேதம்'. இந்த படம் தமிழில் சிம்பு, அனுஷ்கா, பரத் ஆகியோர் நடிக்க ‛வானம்' எனும் பெயரில் ரீமேக் ஆனது. தெலுங்கில் ஹிட் அடித்த படம் தமிழில் சுமாரான வரவேற்பையே பெற்றது. இப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவு பெற்றதுள்ளது.

இதுபற்றி கிரிஷ் அளித்த ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது, வேதம் படத்தின் புரோமோசனுக்காக அனுஷ்காவின் கிளாமர் ஆன போஸ்டர் ஒன்றை சிட்டியின் முக்கிய பகுதியில் விளம்பரமாக பயன்படுத்தினோம். அதனால் சுமார் 40 விபத்துகள் ஏற்பட்டது என வழக்கு பதிவானது. இதனால் அந்த விளம்பர போஸ்டரை அகற்றினோம் என இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !