ஆர்யா 36வது படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது
ADDED : 162 days ago
மிஸ்டர் எக்ஸ், வேட்டுவம் போன்ற படங்களில் நடித்து வருகிறார் ஆர்யா. இந்த படங்களை தொடர்ந்து ரன் பேபி ரன் என்ற படத்தை இயக்கிய ஜியென் கிருஷ்ணமூர்த்தி இயக்கும் தனது 36வது படத்தில் அவர் நடிக்கப் போகிறார். இப்படத்திற்கு மோகன்லாலின் எம்புரான் படத்திற்கு கதை திரைக்கதை எழுதிய முரளி கோபி கதை எழுதியுள்ளார். மினி ஸ்டுடியோ வினோத்குமார் தயாரிக்க, அக்னிஷ் லோக்நாத் இசையமைக்கிறார். இப்படத்தின் டைட்டில் டீசர் ஜூன் 9ம் தேதியான நாளை மாலை 5 மணிக்கு வெளியாகிறது. இது குறித்த ஒரு போஸ்டரை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ஆர்யா. கடந்த மாதம் சந்தானம் நடிப்பில் வெளியான டிடி நெக்ஸ்ட் லெவல் என்ற படத்தை ஆர்யா தயாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.