கமல்ஹாசன் தயாரிப்பில் அருண் குமார்?
ADDED : 155 days ago
சித்தா படத்தின் வெற்றிக்குப் பிறகு அருண் குமார் இயக்கத்தில் விக்ரம், துஷாரா விஜயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 'வீர தீர சூரன் 2'. இப்படம் சூப்பர் ஹிட்டாகிவில்லை என்றாலும் சுமாரான வெற்றியை பதிவு செய்தது. இந்த படத்தின் முதல் பாகமும் உருவாக உள்ளது. மறுபுறம் அருண் குமார் அடுத்த படம் என்ன என்பது குறித்து ரசிகர்கள் மத்தியில் கேள்வியாக இருந்தது.
இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு படம் இயக்க ஒப்பந்தம் ஆகியுள்ளாராம் அருண் குமார். நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களை தேர்வு செய்யும் பணி நடக்கிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.