உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சர்தார் 2 படப்பிடிப்பு நிறைவு பெற்றது

சர்தார் 2 படப்பிடிப்பு நிறைவு பெற்றது

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி இரு வேடங்களில் நடித்து வெளியான படம் சர்தார். இந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் இவர்கள் கூட்டணியில் சர்தார் 2 படம் உருவாகி வருகிறது. இதில் நாயகிகளாக மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத் , ரஜிஷா விஜயன் ஆகியோர் நடிக்க, வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும், முக்கிய வேடத்தில் யோகி பாபுவும் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு சென்னை, மைசூர் மற்றும் சில வெளிநாடுகளிலும் படமாக்கப்பட்டது. இதன் இறுதிகட்ட படப்பிடிப்பு பேங்காக்கில் நடைபெற்ற நிலையில் நேற்று சர்தார் 2 படப்பிடிப்பு முழுவதும் நிறைவு பெற்றதுள்ளது. இதை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினார். அதுதொடர்பான போட்டோ வெளியாகி உள்ளது. அடுத்த ஒரு வாரத்தில் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை துவக்குகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !