ஜப்பானில் தனுஷ், மாரி செல்வராஜ் படத்தின் படப்பிடிப்பு
ADDED : 201 days ago
நடிகர் தனுஷ், இயக்குனர் மாரி செல்வராஜ் கூட்டணியில் 2021ல் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் ‛கர்ணன்'. இந்த படத்திற்கு பின் மீண்டும் இவர்கள் கூட்டணியில் ஒரு படம் உருவாகிறது. அதன்படி தனுஷின் 56வது படத்தை மாரி செல்வராஜ் இயக்குவதாகவும், இதை வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.
தற்போது மாரி செல்வராஜ், 'பைசன் காள மாடான்' என்ற படத்தை இயக்கி உள்ளார். துருவ் விக்ரம் நடித்துள்ள இதன் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடக்கின்றன. மறுபுறம் தனுஷ் படத்தின் பணியையும் துவங்கியுள்ளார் மாரி செல்வராஜ். சமீபத்தில் ஜப்பான் நாட்டிற்கு சென்று இந்த படத்திற்கான லோகேஷன் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளார் மாரி செல்வராஜ். இந்த படத்தின் முழு ஸ்கிரிப்ட் பணியை முடிக்க 7 மாதம் ஆகுமாம்.