மேலும் செய்திகள்
மனிதத்தன்மையை அழித்துவிடும் : நிவேதா பெத்துராஜ்
110 days ago
200 படங்களை கடந்த 2025
110 days ago
முதல் நாளில் 154 கோடி வசூலித்த பவன் கல்யாணின் ஓஜி
110 days ago
அக்., 1ல் ஓடிடியில் வெளியாகும் மதராஸி
110 days ago
வெங்கட் பிரபு இயக்கத்தில் கடைசியாக விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் 'தி கோட்'. இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி படமாக அமைந்தது. ஆனாலும், வெங்கட் பிரபுவின் அடுத்த படம் இழுபறியில் இருந்தது. சிவகார்த்திகேயனை வைத்து இவர் ஒரு படம் இயக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் கால்ஷீட் பிரச்னையால் அந்த படம் தள்ளிபோய்க் கொண்டே இருந்தது. தற்போது நவம்பர் மாதத்தில் கால்ஷீட்டை சிவகார்த்திகேயன் ஒதுக்கி உள்ளாராம். இதனால் படத்திற்கான முன் தயாரிப்பு பணிகளை வெங்கட் பிரபு இலங்கையில் மேற்கொண்டு வந்தார்.
இந்த படமும் டைம் டிராவல் சம்மந்தப்பட்ட சயின்ஸ் பிக்ஷன் கதையில் தான் உருவாகிறது. படத்தில் இரு நாயகிகள் உள்ளனர். கல்யாணி பிரியதர்ஷன், கயாடு லோகர் ஆகியோர் நடிக்க போகிறார்கள். இவர்களில் கல்யாணி ஏற்கனவே வெங்கட்பிரபுவின் மாநாடு மற்றும் சிவகார்த்திகேயன் உடன் ஹீரோ படங்களில் நடித்தவர்.
கயாடு முதன்முறையாக வெங்கட்பிரபு, சிவகார்த்திகேயன் உடன் பணியாற்ற உள்ளார். டிராகன் படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமான கயாடு லோகருக்கு தொடர்ச்சியாக பல பட வாய்ப்புகள் வருகின்றன. தற்போது இதயம் முரளி, சிம்புவின் 49வது படம் ஆகிய படங்களை இவர் கைவசம் வைத்துள்ளார்.
110 days ago
110 days ago
110 days ago
110 days ago