நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா
ADDED : 116 days ago
நாக சைதன்யாவும், சமந்தா தெலுங்கில் ஏ மாயா சேஷாவே என்ற படத்தில் இணைந்து நடித்தபோது காதலிக்க தொடங்கி, 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். ஆனால் 2021ம் ஆண்டு அவர்கள் விவாகரத்து பெற்றார்கள். அதையடுத்து நாக சைதன்யா தெலுங்கு நடிகை சோபிதா துளிபாலாவை மறுமணம் செய்து கொண்டார். ஆனால் சமந்தா இன்னும் மறுமணம் செய்து கொள்ளவில்லை.
இந்த நிலையில், நாக சைதன்யாவை காதலித்தபோது தனது உடம்பில் குத்திக் கொண்ட சில டாட்டூகளை நீக்கி வருகிறார் சமந்தா. குறிப்பாக, அவர்கள் காதலிக்க காரணமாக இருந்த ஏ மாயா சேஷாவே என்ற படத்தின் பெயரை சுருக்கி ஒய்எம்சி என்ற பெயரில் டாட்டூவாக கழுத்தின் பின்பகுதியில் குத்தி இருந்தார் சமந்தா. ஆனால் தற்போது அந்த டாட்டூவை அழித்திருக்கிறார் சமந்தா. அவர் தனது இணைய பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ மூலம் இது தெரியவந்துள்ளது.