வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி
ADDED : 154 days ago
நடிகை நயன்தாரா, விக்னேஷ்சிவன் தம்பதியினர் இன்று தங்கள் 3வது திருமண நாளை கொண்டாடுகிறார்கள். இப்போது பிரதீப் ரங்கநாதன், கிர்த்தி ஷெட்டி நடிக்கும் எல்ஐகே படத்தை இயக்கி வருகிறார் விக்னேஷ் சிவன். டிராகன் பெரிய ஹிட் என்பதால் இந்த படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பு. சில ஆண்டுகள் காத்திருந்து இந்த படத்தை இயக்கி இருக்கும் விக்னேஷ் சிவனும் ஒரு வெற்றிக்காக காத்திருக்கிறார்.
நயன்தாராவுக்கு கடந்த சில படங்கள் ஓடவில்லை. அன்னபூரணி, டெஸ்ட் படங்கள் அவருக்கு பெயர் வாங்கிக் கொடுக்கவில்லை. இப்போது சுந்தர்சியின் மூக்குத்திஅம்மன் 2, மண்ணாங்கட்டி, ராக்காயி, தெலுங்கில் சிரஞ்சீவி படம், மலையாளத்தில் ஒரு படம், கன்னடத்தில் யஷ் நடிக்கும் டாக்சிக், கவினுடன் ஒரு படம் என பல படங்களில் நயன்தாரா நடித்து வருகிறார். அவரும் கணவர் போல் ஒரு வெற்றிக்காக ஏங்குகிறார்.