உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'பென்ஸ்' படத்தில் இணையும் ஹரிஷ் கல்யாண், மூன்று நாயகிகள்

'பென்ஸ்' படத்தில் இணையும் ஹரிஷ் கல்யாண், மூன்று நாயகிகள்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது ஜி ஸ்குவாட் நிறுவனத்தின் மூலம் படங்களை தயாரிக்கிறார். தற்போது தனது கதையில், ரெமோ பட இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கும் படம் பென்ஸ். இதில் கதாநாயகனாக ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். சாய் அபயங்கர் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படம் துவங்கியது. நிவின் பாலி வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க இணைந்துள்ளார் என அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில் இப்படத்தில் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இளம் நடிகரான ஹரிஷ் கல்யாண் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் கதாநாயகிகளாக பிரியங்கா மோகன், சம்யுக்தா மேனன் மற்றும் மடோனா செபஸ்டியான் ஆகியோர் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !