உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / காஜல் அகர்வால் இயக்குனர் ஆகிறாரா?

காஜல் அகர்வால் இயக்குனர் ஆகிறாரா?


திருமணத்துக்கு பின் காஜல் அகர்வாலுக்கு பட வாய்ப்புகள் குறைந்துவிட்டன. அம்மா ஆன பின் கிட்டத்தட்ட நின்றுவிட்டன. இந்தியில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அவர் நடித்த 'சிக்கந்தர்' படமும் தோல்வி அடைந்துவிட்டது. விளம்பர படங்கள், பிஸினஸ், கணவர், குழந்தை என மும்பையில் இருக்கிறார் காஜல்.

இந்நிலையில் அவர் விரைவில் ஒரு படத்தை தயாரிக்கப் போகிறார், அவரே அந்த படத்தை இயக்கப் போகிறார் என்று கூறப்படுகிறது. எந்த இயக்குனரிடமும் உதவியாளராக பணியாற்றாத நிலையில், இயக்குனர் ஆக பயற்சி எடுக்காத நிலையில் அவரால் எப்படி படம் இயக்க முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது. சினிமாவில் அவரைவிட சீனியரான குஷ்பு, சிம்ரன், ஜோதிகா, சிம்ரன் போன்வர்கள் கூட இன்னமும் படம் இயக்கவில்லை. காஜலுக்கு ஏனிந்த ரிஸ்க் என்று அவருடைய நண்பர்களே கேட்கிறார்கள். ஆனால், காஜல் தரப்போ, அது குறித்து இன்னமும் உறுதி முடிவு எடுக்கவில்லை'' என்கிறார்களாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !