த.வெ.க.,வில் இணைகிறாரா அர்ஜூன்? உண்மை என்ன?
ADDED : 152 days ago
லியோ படத்தில் விஜயும், அர்ஜூனும் இணைந்து நடித்து இருந்தனர். விஜய் அரசியல் குறித்து முன்பு சில கருத்துகளை தெரிவித்து இருந்தார் அர்ஜூன். சமீபகாலமாக விஜயின் த.வெ.க.,வில் பலர் இணைந்து வரும் நிலையில், நடிகர் அர்ஜூனும் இணையப்போகிறார். அவருக்கு வெயிட்டான பதவி தரப்பட உள்ளது என செய்திகள் கசிந்தன.
இது குறித்து அர்ஜூன் தரப்பில் விசாரித்தால் 'அர்ஜூன் இப்போது நடிப்பு, இயக்கம் என பிஸியாக இருக்கிறார். அவர் தேசப்பற்று மிகுந்தவர், அதை தனது படங்களில் காண்பிப்பார், தனது செயல்களில் காண்பிப்பார் என சொல்லி தெரிய வேண்டியதில்லை. மற்றபடி அவருக்கு அரசியல் ஆர்வம் இல்லை. த.வெ.க.,வில் இணைப்போகிறார் என்று வரும் செய்திகளில் துளியும் உண்மையில் இல்லை.''என்று மறுக்கிறது