தந்தையின் 70வது பிறந்தநாளில் 75 பாட்மின்டன் பயிற்சி மையங்களை துவங்கிய தீபிகா படுகோனே
பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடிகர் ரன்வீர் சிங்கை திருமணம் செய்து கொண்ட பின்னரும் கூட சினிமாவில் தொடர்ந்து பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் நாடெங்கிலும் 75 நகரங்களில் பாட்மின்டன் பயிற்சி மையங்களை தனது தந்தையின் 70வது பிறந்த நாளான ஜூன் 10 முதல் துவங்கியுள்ளார் தீபிகா படுகோனே. தீபிகாவின் தந்தை பிரகாஷ் படுகோனே முன்னாள் இந்திய பாட்மின்டன் சாம்பியன் ஆவார்.
தந்தையை கவுரவப்படுத்தும் விதமாகவும் அடுத்த தலைமுறையினருக்கு பாட்மின்டன் பயிற்சி வழங்க வேண்டும் என்கிற எண்ணத்திலும் சென்னை, கோவை, பெங்களூரு, மைசூர், மும்பை உள்ளிட்ட 75 நகரங்களில் இதை துவங்கியுள்ளார். வரும் 2027க்குள் 250 நகரங்களில் இந்த பாட்மின்டன் பயிற்சி மையங்களை துவங்க திட்டமிட்டுள்ள தீபிகா படுகோனே, அனைவருக்கும் பாட்மின்டன் என்கிற எண்ணத்தின் அடிப்படையில் இதை செயல்படுத்த துவங்கியுள்ளாராம்.