உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கைதி 2வில் இணைகிறாரா அனுஷ்கா?

கைதி 2வில் இணைகிறாரா அனுஷ்கா?

நடிகை அனுஷ்கா ஷெட்டி சில வருடங்களுக்கு முன்பு வரை தெலுங்கு, தமிழ் மொழி படங்களில் பிஸியாக நடித்து வந்தார். அதன்பின் கடந்த சில ஆண்டுகளில் ஓரிரு படங்களில் மட்டுமே நடித்தார். ஆனால் அப்படி அவர் நடித்த படங்கள், பாகுபலி படங்கள் அளவிற்கு பேசப்படவில்லை. இடையே உடல் எடையும் அதிகரித்தது. தற்போது மீண்டும் உடல் எடையை குறைத்து நடித்து வருகிறார் அனுஷ்கா. இவர் நடித்துள்ள காட்டி திரைப்படம் அடுத்தமாதம் வெளியாகிறது.

இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அனுஷ்கா தமிழுக்கு வருகிறார். 2019ம் ஆண்டில் லோகேஷ் கனகராஜ், கார்த்தி கூட்டணியில் வெளிவந்த படம் 'கைதி'. இதன் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகவுள்ளது. இதில் கார்த்தி உடன் இணைந்து முக்கியமான கதாபாத்திரத்தில் அனுஷ்கா நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே கார்த்தி, அனுஷ்கா இருவரும் அலெக்ஸ் பாண்டியன் எனும் படத்தில் இணைந்து நடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !