உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக் : ஒரே படத்தில் 3 கதைகள்

பிளாஷ்பேக் : ஒரே படத்தில் 3 கதைகள்

பல கதைகள் கொண்ட படத்தை 'ஆந்தாலஜி' வகை என்று அழைப்பார்கள். ஆனால் ஆந்தாலஜி என்ற சொல் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாவதற்கு முன்பே அத்தகைய படங்கள் வெளிவந்திருக்கிறது. குறிப்பாக 1950ம் ஆண்டு வெளியான படம் 'பாரிஜாதம்'.

இதில் டி.ஆர்.மகாலிங்கம், எம்.வி.ராஜம்மா, பி.எஸ்.சரோஜா, ஆர்.பாலசுப்ரமணியம், என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம், நாகர்கோவில் கே.மகாதேவன், புலிமூட்டை' ராமசுவாமி, டி.எஸ்.ஜெயா, மேனகா, காக்கா' ராதாகிருஷ்ணன், சி.எஸ்.டி.சிங், டி.மினிலி.சி.தஹோவ் உள்பட பலர் நடித்திருந்தனர். கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கினார். இளங்கோ வசனங்களை எழுதினார், சி.ஆர்.சுப்பாராமன் இசை அமைத்தார்.

இந்த படத்தில் 3 கதைகள் இடம் பெற்றிருந்தது. அழிக்கவே முடியாத நரகாசுரனை அழித்து தீபாவளி வந்த கதை, கிருஷ்ணரின் மனைவிளான பாமா, ருக்மணிக்கு இடையிலான ஈகோ மோதல் கதை என இரண்டு புராண கதைகள் இடம்பெற்றது.

இது தவிர தனி டிராக்காக என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம் நடித்த காமெடி கதை இடம்பெற்றது. முதல் இரண்டு கதைகளிலும் வரும் புராண கதாபாத்திரங்களை கிண்டல் செய்யும் விதமாக இந்த கதை இடம்பெற்றது. அதோடு அன்றைக்கு இருந்த மூட நம்பிக்கைகளையும் இந்த படம் சாடியது. என்றாலும் படம் போதிய வரவேற்பை பெறவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !