மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
111 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
111 days ago
பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அமீர்கான். அவரது பல படங்கள் வித்தியாசமான படங்கள் எனப் பெயரெடுத்தாலும், அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்த விமர்சனங்கள் பரபரப்பை ஏற்படுத்தும்.
இதற்கு முன்பு இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து பெற்றவர், தற்போது மூன்றாவதாக கவுரி ஸ்ப்ராட் என்ற பெண்ணை தன்னுடைய தோழி என அறிவித்து பரபரப்பை உருவாக்கினார். ரீனா தத்தா என்பவரை 1986ல் திருமணம் செய்து 2002ல் பிரிந்தார். பின்னர் கிரண் ராவ்-வை 2005ல் திருமணம் செய்து 2021ல் விவாகரத்து பெற்றார். முதல் மனைவிக்கு ஒரு மகன், ஒரு மகள், இரண்டாவது மனைவிக்கு ஒரு மகன் இருக்கிறார்கள்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் இரண்டு மனைவிகளுடனான விவாகரத்து குறித்த கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.
“இந்தியாவில் நாம் திருமணத்தை மிகவும் முக்கியமானதாகப் பார்க்கிறோம். ஒருவருக்கு திருமணம் முறிந்து விவாகரத்து ஏற்பட்டால் மக்கள் அதை விரும்புவதில்லை. அது எனக்கு முழுமையாகத் தெரியும். நாம் அதை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. அதை நான் உண்மையாக வைத்திருக்க விரும்புகிறேன்.
ரீனா அல்லது கிரணுடன் திருமண பந்தத்தில் இருக்க முடியாதது எங்களுக்கும், எங்கள் மொத்த குடும்பத்திற்கும் ஒரு இழப்புதான். நாங்கள் இதை மகிழ்ச்சியுடன் செய்யவில்லை. சில சூழ்நிலைகள் எங்களை இந்த நடவடிக்கையை எடுக்கத் தூண்டியது. கிரணும் நானும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தோம் என்று உலகம் முழுவதும் பொய் சொல்ல முடியும் என்று நினைக்கிறேன். ஆனால், அது ஒரு பொய்யாக மட்டுமே இருக்கும்,” என்று தெரிவித்துள்ளார்.
அமீர்கானுக்கு தற்போது 60 வயது ஆகியுள்ளது. அவர் தயாரித்து நடித்துள்ள 'சித்தாரே ஜமீன் பர்' ஹிந்திப் படம் அடுத்த வாரம் ஜுன் 20ம் தேதி தமிழிலும் டப்பிங் ஆகி வெளியாக உள்ளது.
111 days ago
111 days ago