ஒரே நேரத்தில் 5 படங்களா? : சிம்பு விளக்கம் அளிப்பாரா
ADDED : 113 days ago
பெரிதும் எதிர்பார்த்த தக் லைப் படம் ஓடவில்லை. சிம்புக்கு பெரிய வெற்றி கிடைக்கவில்லை. அடுத்து பார்க்கிங் பாலகிருஷ்ணன் படம், தேசிங்கு பெரியசாமி படம், அஸ்வத் மாரிமுத்து படங்களில் நடிக்கப் போகிறார் சிம்பு. இதற்கிடையில், மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கப் போகிறார். வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என்றும் செய்திகள் கசிகின்றன.
ஒரே நேரத்தில் 5 படங்கள் என்பது சாதாரண விஷயமல்ல, ஏகப்பட்ட குழப்பங்கள் பிரச்னைகள் ஏற்படும். எனவே, எந்த படப்பிடிப்பு முதலில் தொடங்குது. எந்த படம் முதலில் ரிலீஸ், அடுத்த என்னென்ன படங்கள் என்பதை சிம்பு தெளிவாக அறிவிக்க வேண்டும். அவருக்கு தேவை ஒரு பெரிய வெற்றி. அதற்கேற்ப திட்டமிட வேண்டும் என்கிறார்கள் அவரின் ஆதரவாளர்கள்.