கிங்டம் படத்தின் ரிலீஸ் தேதியில் மீண்டும் மாற்றமா?
ADDED : 112 days ago
ஜெர்ஸி பட இயக்குனர் கவுதம் தின்னூரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா அவரது 12வது படமாக நடித்துள்ள படம் 'கிங்டம்' . இதில் கதாநாயகியாக பாக்யஸ்ரீ ப்ரோஸ் நடித்துள்ளார். சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க, அனிரூத் இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தின் மீது ரசிகர்களுக்கு நல்ல எதிர்பார்ப்பு உள்ளது. வருகின்றன ஜூலை 4ம் தேதியன்று இப்படம் திரைக்கு வருவதாக அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் மூன்றாவது முறையாக இப்படம் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாம். இதற்கான காரணமாக அனிரூத் பின்னனி இசை பணியை இன்னும் முடிக்கவில்லை என்கிறார்கள். இதனால் இந்த படத்தின் விளம்பரம் சம்மந்தப்பட்ட விஷயங்களையும் நிறுத்தி வைத்துள்ளனராம். அதேசமயம் படத்தை ஜூலை 4ல் வெளியிடும் முயற்சிகளையும் படக்குழுவினர் மேற்கொண்டுள்ளனராம்.