மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
108 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
108 days ago
விஜயகாந்த் இளைய மகன் சண்முக பாண்டியன் நடித்த ‛படை தலைவன்' படத்தில் அவருக்கு ஹீரோயின் இல்லை. யானையை தேடி செல்லும் கதை என்பதால் ஹீரோயின் தேவையில்லை என நினைத்து விட்டார் இயக்குனர். சரி, அடுத்து என்ன படத்தில் நடிக்குறீங்க அதில் ஹீரோயின் உண்டா என்றால் சண்முகபாண்டியன் சிரிக்கிறார்.
‛‛அடுத்து பொன்ராம் இயக்கும் கொம்பு சீவி படத்தில் நடிக்கிறேன். அது அவர் ஸ்டைல் பக்கா கமர்ஷியல் கதை. காதல், காமெடி இருக்கிறது. ஹீரோயினும் இருக்கிறார்'' என்கிறார். அந்த படம் 1990களில் நடக்கும் கதையாம். அதில் ஹீரோயினாக தர்ணிகா நடிக்கிறார். அவருக்கு போலீஸ் கேரக்டர் என்று கூறப்படுகிறது. இவர் முன்னாள் நடிகை ஒருவரின் மகள் என்றும் கிசுகிசுக்கப்படுகிறது. இந்த படத்தில் சரத்குமார் முக்கியமான கேரக்டரில் வருகிறார். ஒரு உண்மை சம்பவத்தை தழுவி இந்த கதையை எடுக்கிறாராம் பொன்ராம். 10 ஆண்டுகளுக்கு முன்பு ‛சகாப்தம்' என்ற படத்தில் நடித்தார் சண்முகபாண்டியன். அதில் ஹீரோயினாக நேஹா நடித்தார். அவர் எப்படி இருப்பார் என்பதையே தமிழ் சினிமா மறந்துவிட்டது.
108 days ago
108 days ago