உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‛கைதி -2' படத்தில் நடிக்கவில்லை! -அனுஷ்கா மறுப்பு

லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‛கைதி -2' படத்தில் நடிக்கவில்லை! -அனுஷ்கா மறுப்பு


‛மிஸ் ஷெட்டி மிஸ்டர் பாலிஷெட்டி' படத்தை அடுத்து தற்போது கிரீஸ் இயக்கியுள்ள ‛காட்டி', மலையாளத்தில் ‛கத்தனார் காட்டு மந்திரவாதி' போன்ற படங்களில் நடித்து வருகிறார் அனுஷ்கா. இதில் காட்டி படம் ஜூலை 11ம் தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தை அடுத்து தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் கைதி- 2 படத்தில் அனுஷ்கா நடிக்க இருப்பதாக சில தினங்களாக சோசியல் மீடியாவில் ஒரு செய்தி வெளியாகி வருகிறது. ஆனால், தற்போது இந்த செய்தியை மறுத்துள்ளார் அனுஷ்கா.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் கைதி-2 படத்தில் நடிப்பதற்காக இதுவரை என்னை யாரும் அணுகவில்லை. யாரோ இப்படி ஒரு தவறான செய்தியை பரப்பி உள்ளார்கள் என்று அதற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார் அனுஷ்கா. மேலும், இதற்கு முன்பு சுராஜ் இயக்கிய ‛அலெக்ஸ் பாண்டியன்' என்ற படத்தில் கார்த்தியும் அனுஷ்காவும் இணைந்து நடித்துள்ளார்கள். என்றாலும், லோகேஷ் கனகராஜ் இயக்கிய படங்களில் இதுவரை அனுஷ்கா நடிக்கவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !