உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜூலை 18ல் ரீ ரிலீஸ் ஆகும் நாகசைதன்யா, சமந்தா படம்

ஜூலை 18ல் ரீ ரிலீஸ் ஆகும் நாகசைதன்யா, சமந்தா படம்

தமிழில் சிம்பு, திரிஷா நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான படம் விண்ணைத்தாண்டி வருவாயா. இந்த படத்தின் தெலுங்கு பதிப்பான ‛ஏ மாய சேசாவே'வில் நாகசைதன்யா - சமந்தா நடித்தனர். இந்த படத்தில் நடித்தபோது தான் நாகசைதன்யா, சமந்தா இடையே காதல் ஏற்பட்டு 2017ல் திருமணமும் செய்து கொண்டார்கள். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக 2021ம் ஆண்டில் விவாகரத்து பெற்றார்கள். இந்த நிலையில் அவர்கள் காதலிப்பதற்கு காரணமாக இருந்த அந்த ‛ஏ மாய சேசாவே' என்ற படத்தை வருகிற ஜூலை 18ம் தேதி தெலுங்கில் ரீ ரிலீஸ் செய்கிறார்கள். இதுகுறித்த விளம்பரங்கள் தற்போது பெரிய அளவில் செய்யப்பட்டு வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !