மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
108 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
108 days ago
1985ம் ஆண்டு நடிகரும், இயக்குநருமான பாண்டியராஜன் இயக்கிய, 'ஆண்பாவம்' படத்தில் அறிமுகமானார் கொல்லங்குடி கருப்பாயி. அதற்கு முன்பு கோவில் திருவிழாக்களில் நாட்டுப்புற பாடகியாகவும், வானொலி நிலையத்தில் பகுதி நேர பாடகியாகவும் பணியாற்றினார்.
பாண்டியராஜனின் ஆண்பாவம் படத்தில் பாடத் தெரிந்த ஒரு கிராமத்து பாட்டி கேரக்டருக்கு ஒருவர் தேவைப்பட்டால் இதற்காக தமிழகம் முழுவதும் அலைந்து தேடியதில் கிடைத்தவர் தான் கொல்லங்குடி கருப்பாயி. ஆண்பாவம் படத்தில் அவர் பாண்டியராஜனின் பாட்டியாக நடித்தது பெரும் வரவேற்பு பெற்றது. சினிமா மூலம் இவரது நாட்டுப்புற பாடல் பட்டித்தொட்டி எங்கும் பரவத் தொடங்கியது.
ஆண் பாவம் படத்திற்கு பிறகு மேலும் சில படங்களில் நடித்த அவருக்கு சரியான பின்னணி இல்லாததாலும், கொல்லங்குடியிலேயே அவர் வசித்ததாலும் அதிக வாய்ப்புகள் அவருக்கு கிடைக்கவில்லை. அன்பு கணவர் இறந்து விட்டதால் அவர் பாடுவதையும் நிறுத்திக் கொண்டார். இதனால் வறுமையில் வாடிய அவரை நடிகர் விஷால் நடிகர் சங்கத்தில் இணைத்து மாதந்தோறும் உதவித்தொகை வழங்கி வந்துள்ளார். அதனால் விஷாலை தன் மகனாகவே நினைத்தார் கொல்லங்குடி கருப்பாயி.
சினிமாவில் அறிமுகப்படுத்திய பாண்டியராஜனை தனது பேரனாக கருதினார். அவரும் அவ்வப்போது உதவி செய்து வந்துள்ளார். ஒருமுறை பாண்டியராஜன் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதைக் கேள்விப்பட்ட கொல்லங்குடி கருப்பாயி சென்னைக்கு வந்து எப்படியோ மருத்துவமனையை தேடி கண்டுபிடித்து சென்றார். இதை கேள்விப்பட்ட பாண்டியராஜன் குடும்பத்தினர் அவரை பாண்டியராஜனை பார்க்குமாறு கேட்டனர். உடல் நலம் சரியில்லாமல் இருக்கும் நிலையில் என் பேரனை பார்க்க மாட்டேன் அவர் நன்றாக குணமடைந்து திரும்பிய பிறகு அவரை பார்ப்பேன் என்று கூறினார்.
பாண்டியராஜன் குணமாகி திரும்பும் வரை மருத்துவமனை வாசலிலேயே இரண்டு நாட்கள் படுத்துக் கிடந்துள்ளார். பின்னர் குணமான பாண்டியராஜனை பார்த்து ஆசிர்வதித்து விட்டு சென்றுள்ளார். நடிகை, பாடகி என பல முகங்கள் இருந்தாலும் அவர் கடைசி வரை கிராமத்து வெள்ளந்தி மனுசியாக வாழ்ந்தார். கொல்லங்குடி கருப்பாயி கடந்த ஜூன் 14ல் காலமானார்.
108 days ago
108 days ago