மகளின் விழாவில் குடும்பத்துடன் நடனமாடிய ஏ.ஆர்.முருகதாஸ்
ADDED : 199 days ago
பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடிப்பில் சிக்கந்தர் படத்தை இயக்கிய ஏ. ஆர்.முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் மதராஸி என்ற படத்தை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் முருகதாஸின் மகள் திவ்யாவின் பூப்புனித நீராட்டு விழா நிகழ்ச்சி அவரது சொந்த ஊரான கள்ளக்குறிச்சியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின்போது தங்களது உறவினர்கள் முன்பு தனது மனைவி மற்றும் மகன், மகளுடன் இணைந்து சூர்யா நடித்து வெளியான ரெட்ரோ படத்தில் இடம்பெற்ற கனிமா பாடலுக்கு அசத்தலான நடனமாடி உள்ளார் முருகதாஸ். அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது.