நிறைய பாலியல் தொல்லை : பாடகி ஜொனிடா காந்தி
ADDED : 109 days ago
தமிழில் ஓகே கண்மணி படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மெண்டல் மனதில் என்ற பாடலை பாடி பிரபலமானவர் பாடகி ஜொனிடா. அதன்பிறகு அனிருத் இசையில் செல்லம்மா மற்றும் அரபிக் குத்து பாடல்களை பாடி மேலும் பிரபலமானார். உலக அளவில் பல இசை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.
இந்நிலையில் பாடகி ஜொனிடா கூறுகையில், இன்ஸ்டாகிராமில் அதிக பாலியல் சீண்டல் நடக்கிறது. ஒரு ஆண் தனது அந்தரங்க பகுதியை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டதோடு, அதன் பின்னணியில் எனது புகைப்படத்தையும் வைத்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தேன். இது தொடர்ந்து வந்தபோதும் யார் மீதும் நான் இதுவரை வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கவில்லை. அது போன்ற நபர்களை உடனடியாக பிளாக் செய்து விடுகிறேன். இதுபோன்று சோசியல் மீடியாவில் நான் பல பாலியல் தொல்லைகளை சந்தித்து இருக்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார் ஜொனிடா.