மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
107 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
107 days ago
மலையாளத்தில் கடந்த ஏப்ரல் மாதம் மோகன்லால் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்று, 200 கோடிக்கு மேல் வசூலித்து மலையாள சினிமாவில் இதுவரை அதிகம் வசூலித்த படம் என்கிற பெருமையை பெற்ற படம் 'தொடரும்'. இயக்குனர் தருண் மூர்த்தி இந்த படத்தை இயக்கியிருந்தார். படம் வெளியாகி ஒன்றரை மாதங்களுக்கு மேல் ஆன நிலையில் தற்போது தொடரும் படத்தின் கதை என்னுடைய ஸ்கிரிப்டிலிருந்து பெரும் பகுதி உருவப்பட்டது தான் என்று ஒரு பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார் பிரபல மலையாள சர்ச்சை இயக்குனர் சணல்குமார் சசிதரன்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மஞ்சு வாரியார் பற்றி சில கருத்துக்களை கூறியதால் அவர் மீது மஞ்சு வாரியர் அவதூறு வழக்கு தொடர்ந்து, அதற்காக கைது செய்யப்பட்ட நிகழ்வை எல்லாம் சந்தித்தவர் தான் இந்த சணல்குமார் சசிதரன். விருதுகளை குறிவைத்து படம் இயக்கும் இவர், கடைசியாக மஞ்சுவாரியரை வைத்து இயக்கிய 'காயட்டம்' திரைப்படம் இன்னும் வெளிவரவில்லை. இந்த நிலையில் தான் சமீபத்தில் தனது சோசியல் மீடியா பக்கத்தில் தொடரும் படத்தின் கதை குறித்து இப்படி ஒரு தகவலை கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, “2020ல் தீயாட்டம் என்கிற ஸ்கிரிப்டை நான் தயார் செய்தேன். அந்த சமயத்தில் மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்களிடமும் இந்த கதையை கூறியிருக்கிறேன். என்னுடைய கதையில் கதாநாயகன் ஒரு ஆட்டோ டிரைவர். வேண்டுமென்றே அவன் மீது பழி சுமத்தப்பட்டு போலீசாரால் கைது செய்யப்படுகிறான் என்பது போன்று கதை உருவாக்கப்பட்டிருக்கும். தொடரும் படத்தில் கதையின் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தாலும் கிட்டத்தட்ட என்னுடைய தீயாட்டம் கதையிலிருந்து தான் அது எடுத்து கையாளப்பட்டுள்ளது என்று உறுதியாக சொல்வேன். விரைவில் என்னுடைய தீயாட்டம் ஸ்கிரிப்ட்டை நான் சோசியல் மீடியாவில் வெளியிடுகிறேன். நீங்கள் படித்துப் பார்த்துவிட்டு நான் சொல்வது உண்மையா இல்லையா என்று கூறுங்கள். உங்களது பார்வைக்கு விட்டு விடுகிறேன்” என்று கூறியுள்ளார் சணல்குமார் சசிதரன்.
107 days ago
107 days ago