மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
107 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
107 days ago
தனுஷ் நடிப்பில் அடுத்ததாக வெளியாக தயாராகி வரும் படம் 'குபேரா'. வரும் ஜூன் 20ம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது. இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடித்துள்ள இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. 'வாத்தி' படத்தை தொடர்ந்து மீண்டும் ஒரு தெலுங்கு இயக்குனரின் படத்தில் தனுஷ் நடித்திருக்கிறார். தமிழை விட தெலுங்கில் இந்த படத்திற்கு அதிகம் வரவேற்பு இருக்கிறது.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தை கேரளாவில் வெளியிடும் உரிமையை துல்கர் சல்மானின் வே பாரர் பிலிம்ஸ் கைப்பற்றியுள்ளது. படங்களை தயாரிப்பதுடன் பட வெளியீட்டிலும் துல்கர் சல்மான் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். இன்னொரு பக்கம் தற்போது கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் உருவாகி வரும் 'யோகா சாப்டர் ஒன் சந்திரா' என்கிற படத்தையும் துல்கர் சல்மான் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடப்பட்டது.
107 days ago
107 days ago