மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
107 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
107 days ago
விடுதலை 2 படத்திற்கு பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் தாணு தயாரிப்பில் சூர்யா நடிக்க இருந்த படம் ‛வாடிவாசல்'. சில ஆண்டுகளாகவே இந்த படம் துவங்குவதில் தாமதம் நிலவி வந்தது. தற்போது இப்படம் கைவிடப்பட்டுள்ளது. இதனால் சிம்புவை வைத்து ஒரு படத்தை இயக்க போகிறார் வெற்றிமாறன். இதை தாணுவே தயாரிக்கிறார்.
இந்த கதை வாடிவாசல் அல்ல, வட சென்னையில் நடைபெறும் கதைக்களத்தை மையப்படுத்தி உருவாகிறது. ஆனால் வட சென்னை 2 இல்லை. தற்போது இந்த படம் சத்தமின்றி துவங்கியதாக தெரிகிறது. இந்நிலையில் இப்படத்தில் சிறிய கதாபாத்திரங்களில் நடிகர் கவின் மற்றும் இயக்குனர் நெல்சன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், வட சென்னை படத்தில் நடித்த கிஷோர், சமுத்திரக்கனி மற்றும் ஆண்ட்ரியா ஆகியோரும் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட போட்டோ ஒன்று வைரலாகிறது. இதில் வெற்றிமாறன் சில விஷயங்களை கூற அதை சிம்பு, நெல்சன் ஆகியோர் கேட்பது போன்று அந்த போட்டோ உள்ளது.
107 days ago
107 days ago