மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
107 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
107 days ago
சூர்யா, பூஜா ஹெக்டே நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய 'ரெட்ரோ' திரைப்படம் கடந்த மே 1ம் தேதி ரிலீசானது. படம் கலவையான விமர்சனங்களை பெற்றபோதிலும், சுமார் 70 கோடி வரை வசூலித்ததாக கூறப்படுகிறது. படம் வெளியானபோது, சிலர் நெகட்டிவ் விமர்சனங்களை பரப்பியதாக சொல்லப்படுகிறது. இதுப்பற்றி கார்த்திக் சுப்பராஜ் கூறியதாவது:
ரெட்ரோ படம் 4 முதல் 5 எபிசோட்களை கொண்டது. ஒவ்வொன்றும் 35 முதல் 40 நிமிடங்களை கொண்டிருந்தன. இது ஆழமான உணர்ச்சிகள், விரிவான அதிரடி காட்சிகள் என ஆன்மிகம், கல்ட், சிரிப்பு கோணத்தில் கூடுதல் விவரங்களுடன் கூடிய அதிக நேரம் கொண்ட படமாக உருவாக்கினோம். ஆனால், இங்குள்ள வியாபார நோக்கத்தின் காரணமாக 3 மணிநேரத்திற்குள்ளாக சுருக்க வேண்டியாக உள்ளது.
அமெரிக்காவில் நீட்டிக்கப்பட்ட நேரமுடைய படமாக வெளியானது. அங்குள்ள நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் நீட்டிக்கப்பட்ட படம் உள்ளது. ஆனால், இந்தியாவிலும் ஓடிடியில் அதுபோன்ற கூடுதல் நேரம் கொண்ட படமாக வெளியிட ஓடிடி நிறுவனத்திடம் பேசினேன். அவர்கள் மறுத்துவிட்டனர். படம் வெளியாகி 3, 4 மாதங்களுக்கு பிறகு இந்த நீட்டிக்கப்பட்ட காட்சிகள் கொண்ட படத்தை வெளியிடுவது தொடர்பாக ஓடிடி நிறுவனத்திடம் பேசி வெளியிட முயற்சித்து வருகிறேன்.
ஆண்டவன் சோதிப்பான்; கைவிட மாட்டான்
பணம் பெற்று ரிவ்யூ சொல்வதை விட, சிலர் பணம் பெற்று ஒரு குறிக்கோளுடனும், வெறுப்புடனும் செயல்படுவது வேதனையாக இருக்கிறது. இதற்காகவே ஒரு அலுவலகம் அமைத்து, குழு அமைத்து செயல்படுவதாக கேள்விப்பட்டதும் அதிர்ச்சியாக இருந்தது. இது சினிமாவுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். திரைப்படங்கள் உங்களை எப்போதும் பாதிக்காது. ஒரு சிலர் மக்களை திரைப்படங்களுக்கு போகவிடாமல் தடுப்பதை சமூக சேவையாக கருதுகிறார்கள். மது குடிப்பதை, சிகரெட் பிடிப்பதை தடுக்கலாம், படம் பார்ப்பதை ஏன் தடுக்க வேண்டும்? ரசிகர்களிடம் விட்டுவிடுங்கள் அவர்கள் முடிவு செய்யட்டும். நல்ல படங்களை ஆண்டவன் சோதிப்பான், ஆனால் கைவிட மாட்டான். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
107 days ago
107 days ago