விஜய் சேதுபதி படத்தில் சம்யுக்தா
ADDED : 145 days ago
பூரி ஜெகன்நாத் தயாரிப்பு, இயக்கத்தில் உருவாகும் பான் இந்திய திரைப்படத்தில் விஜய்சேதுபதி ஹீரோவாக நடிக்கிறார். இதில் தபு, துனியா விஜய் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த பட்டியலில் இப்போது சம்யுக்தா மேனன் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இது வழக்கமான கதாநாயகி வேடம் அல்ல. சம்யுக்தாவின் கதாபாத்திரம் கதையின் ஒருங்கிணைந்த பகுதியாகும். நடிப்பிற்கும், உணர்ச்சிபூர்வமான ஆழத்திற்கும் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன என படக்குழு தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் ஐதராபாத்தில் இப்படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பை நடத்துவதற்கான இடங்களை படக்குழுவினர் தேர்வு செய்துள்ளனர். ஜூன் மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்குகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய இந்திய மொழிகளில் படம் உருவாகிறது.